சர்வதேசத்தின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா திங்கட்கிழமை மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனையை கொரிய மற்றும் ஜப்பான் கடற்பரப்புக்கு இடையே நிகழ்த்தியுள்ளது.
சுமார் 280 மைல் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரிய அதிபர் கிம் நேரில் பார்வையிட்டதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அண்மையில் நடைபெற்ற G7 நாடுகளுக்கான மாநாட்டிலும் வடகொரியாவின் இச்செய்கைக்கு சர்வதேசத் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இதேவேளை வடகொரியாவின் இந்த அண்மைய ஏவுகணை ரஷ்யத் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் கொரியத் தீபகற்பத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாலும் உலக நாடுகள் தமது பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிணைவது அவசியம் என ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment