இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட நிலையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை, வடக்கு மாகாண மீனவர்களின் ஒப்புதலின்றி விடுவிக்கக் கூடாது என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடக்கு மாகாண மீனவர்களின் ஒப்புதலைப் பெறாமல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் விடுவிப்பதற்கு அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“வடக்கு மாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறப்படாமல் இந்திய இழுவை படகுகளும், இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டால், வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் பாரிய போராட்டங்களை நடத்துவோம். இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது தொடர்பாக ஆக்கபூர்வமான பதிலை வழங்க வேண்டும்.” என்றும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய பிரதமரின் வருகை மற்றும் இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
Home
»
Sri Lanka
»
வடக்கு மீனவர்களின் ஒப்புதலின்றி இந்தியப் படகுகளை விடுவிக்கக் கூடாது: வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம்
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment