"தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம். இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம். தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்." என்கிற தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் அம்பாறையில் நடைபெற்று வருகின்றது.
அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் தற்போது (இன்று திங்கட்கிழமை) நடைபெற்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். மே தினக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’; த.தே.கூ.வின் மே தினக் கூட்டத்தில் உறுதி!
Monday, May 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment