Monday, May 8, 2017

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி’ என்கிற புதிய கட்சியை தாம் ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே கே.இன்பராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகள் மட்டுமன்றி, பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், அரசியல் கைதிகள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் யுத்தத்தின் பின்னர் அனுபவித்து வரும் துன்பங்கள் வேதனைக்குரியன. இவற்றிற்கு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தீர்வை பெற்றுத்தராத காரணத்தினாலேயே இவ்வாறான ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer