Friday, May 12, 2017

கோலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், ஹாலிவுட்
படத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்தி, அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
கென் ஸ்காட்' இயக்கும் இந்தப் படத்துக்கு, 'தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆஃப்
தி ஃபகிர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், தனுஷ் மாயாஜாலம்
செய்யும் நபராக நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக, ' தி ஆர்ட்டிஸ்ட்'
படத்தில் நடித்த பெரெனைஸ் பெஜோ நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால்,
படப்பிடிப்பு இப்பொழுது பெல்ஜியத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதால், தனுஷ்
பெல்ஜியம் செல்கிறார். பெல்ஜியத்தில் மூன்று மாதம் படப்பிடிப்பு நடக்கும்
எனக் கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer