Sunday, May 7, 2017

தமது தமிழக பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா
தமிழக பாஜக தலைவர்களோ, அமித்ஷாவின் வருகையை பயன்படுத்தி 'ஆதாயம்' தேட
தொடங்கினர். பசையுள்ள ஜாதி கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களை அமித்ஷாவுடன்
சந்திக்க வைக்கும் பேரங்கள் படு மும்முரமாக நடந்து வந்தது.
அத்துடன் அமித்ஷாவே நாங்க சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்கிறார் என்கிற
தோரணையிலும் தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த தகவல்களை
கேள்விபட்ட அமித்ஷா படு அப்செட்டாயிருக்கிறார். உடனடியாக தமிழிசை
சவுந்தரராஜனை போனில் அழைத்து, மைக் கிடைக்கிறது என்பதற்காக
எல்லாவற்றையும் உளறி கொட்டுவீங்களா? என்னுடைய பயணத்திலும் கூட இப்படி
ஆதாயம் தேட முயற்சிப்பீங்களா? என சத்தம் போட்டாராம்..
அத்துடன் தமது தமிழக பயணத்தையும் ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்
அமித்ஷா என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer