அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். அதேபோன்று, ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச வெசாக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நோக்கிலேயாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment