மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM -South Asian Institute of Technology and Medicine) எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 110 இணைச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போதே, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்காவிட்டால், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அது தொடர்பான திகதிகளை பின்னர் அறிவிப்பதாகவும் அந்தச் சங்கத்தின் முக்கியஸ்தரான வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
சைட்டத்துக்கு எதிராக மீண்டுமொரு பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment