Friday, May 5, 2017

விண் வெளிக்கு அணு குண்டை ஏவி வெடிக்க வைத்தால். அதில் இருந்து தோன்றும், கடுமையான மின் காந்தப் புலம் அமெரிக்க சாட்டலைட்டை செயல் இழக்கச் செய்யும். இதனூடாக அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியாமல் இருட்டில் மூழ்கலாம் என்று, வட கொரிய அதிபர் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதனை அமெரிக்க விஞ்ஞானிகள் மறுத்துள்ளார்கள். வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உண்மையே. அவற்றை விண்ணுக்கு ஏவி வெடிக்கச் செய்ய முடியும். இருப்பினும் அதில் இருந்து தோன்றும் மின் காந்தப் புலமானது தமது சாட்டலைட்டை பாதிக்காது என்று அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு நாட்டிற்கு மிக மிக முக்கியமான பாதுகாப்பு கருவியாக திகழ்வது சாட்டலைட்(செயற்கைகோள்கள்) தான். இதன் உடதவி இன்றி எந்த ஒரு தாக்குதலையும் நடத்த முடியாது. அதுபோக அமெரிக்கா தயாரித்து வைத்துள்ள அனைத்து ஏவுகணைகளும் சாட்டலைட் உதவி இன்றி செலுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

எனவே ஒரு நாட்டின் உளவு சாட்டலைட் செயல் இழந்தால் அன் நாட்டின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும். இந்த விடையத்தில் தான் தற்போது வட கொரிய அதிபர் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

News Source: http://www.dailymail.co.uk/sciencetech/article-4471120/A-North-Korean-space-nuke-WOULDN-T-lay-waste-America.html

0 comments :

Post a Comment

 
Toggle Footer