Tuesday, May 16, 2017

டிரம்ப் அரசு நிர்வாகம் பொறுப்பெடுத்த பின்னர் பள்ளிக் குழந்தைகளின்
உணவில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிச்சேல், இங்குதான் நாம்
அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இப்படிப்பட்ட முடிவுகள் ஏன்
எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்
குழந்தைகள் பள்ளிகளில் நல்ல உணவை சாப்பிட நீங்கள் விருப்பப்பட
மாட்டீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு என்னதான் பிரச்னை? என்னை இந்த
விஷயத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிடுங்கள். ஆனால், ஒருவர் நம்
குழந்தைகள் குப்பையைச் சாப்பிடுவதற்கு சம்மதம் என்று சொல்கிறார் என்றால்,
அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எப்படி நாம் கொண்டாட
முடியும்? என்று சற்று காட்டமாகவே டிரம்ப் அரசை விமர்சித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer