நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இராணுவ ஆட்சி நடத்துகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, “மக்கள் பலம் அரசாங்கத்தின் பக்கம் உள்ளதென்றால் உடனடியாக தேர்தலை நடத்திக் காட்டுங்கள். எமக்கு அஞ்சுவதால் தான் தேர்தலை பிற்போட்டு வருகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைக்க வேண்டிய நேரம் இதுவே. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்று மாகாண சபைகளை கலைக்க வேண்டும்.
தேர்தலை நடத்தினால் தாங்கள் வெற்றி பெறுவோம் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்ற போதிலும், தேர்தலை நடத்த அஞ்சிகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட அவர்கள் நடத்த முடியாது தடுமாறுகின்றனர். மக்கள் பலம் எந்த பக்கம் என்பதை அறிந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் நிலைமைகள் மாறும் என்பதற்கு அமையவே, தேர்தலை பிற்போட்டு வருகின்றனர். ஆகவே தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம்.
ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஜனநாயகத்தை முழுமையாக மீறி செயற்பட்டுப் வருகின்றனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்படுகின்றது. எம்மை இராணுவ ஆட்சியாளர் என கூறிக்கொண்டு இன்று இராணுவ ஆட்சியை நடத்தி வருகின்றனர்.” என்றுள்ளார்.
Friday, May 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment