தனது தந்தையின் தலைக்குப் பதிலாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஐம்பது தலைகள் வெட்டியெறியப்படவேண்டும் என, பாகிஸ்தானால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரின் மகள் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தினரால் கடந்த திங்களன்று எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரேம் சாகர் மற்றும் பரம்ஜீத் சிங் ஆகிய இரண்டு வீரர்களும் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் குரூரக் கொலையால், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
“எனது தந்தையின் தியாகத்துக்கு ஈடாக பாகிஸ்தானிய இராணுவத்தினர் ஐம்பது பேரின் தலைகளை இந்தியப் படை வெட்டியெறிய வேண்டும்” என்று பிரேம் சாகரின் மகளான சரோஜ் என்பவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இதுபோன்ற விடயங்களில் அரசு மெத்தனமாகச் செயற்படுவதாகவும், மனிதாபிமானமற்ற இந்த விடயங்களில் இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், பொம்மைகள் போல் பார்த்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற பாதகச் செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்தும் நடத்திக்கொண்டேயிருக்கும் என்றும் சரோஜ் கூறியுள்ளார்.
Tuesday, May 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment