பெங்களூரில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வருபவர் பிரியா (25), தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி பிரியா தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.
பிரியாவை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்ததை பொலிசார் உறுதி செய்தனர்.
மேலும், அவருடன் தங்கியிருந்த ரியா என்பரும் மாயமாகி இருந்தார்.
கொலையாளியை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை அவர்கள் கைது செய்தனர்.
பிரியாவை, கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள மாதேஷ் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொலையான பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பெங்களூர் வந்த ஹொன்னம்மா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சமயத்தில் தான், மாதேஷுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது கள்ளக்காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஹொன்னம்மாவுக்கு ரியா என்ற நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாதேஷ் ஹொன்னம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் மாதேஷை பிரிந்த ஹொன்னம்மா, ரியாவுடன் வேறு வீட்டில் தனியாக குடிபெயர்ந்துள்ளார்.
மேலும் தனது செல்போன் நம்பரையும் மாற்றியுள்ளார்.
இதை எப்படியோ கண்டுபிடித்த மாதேஷ், அவரை தொடர்பு கொண்டு அவர் வீட்டு முகவரியை அறிந்து அங்கு சென்றுள்ளார்.
பின்னர் மாதேஷும், ஹொன்னம்மாவும் இரவு அங்கு உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன் பிறகு விடிகாலை 3.30 மணியளவில் கண்விழித்த மாதேஷ் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஹொன்னம்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.
தனக்கு தெரியாமல் வீடு மாறியதோடு, மற்றொருவருடன் நெருங்கி பழகி வந்ததால் ஹொன்னம்மாவை மாதேஷ் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment