டி.என்.எஸ்) நடிகர் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய படம் மறைந்த மும்பை தாதா ஹாஜி
மஸ்தானுடைய வாழ்க்கை வரலாறு என்று தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து, ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா,
ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.தனது தந்தையை கடத்தல் காரராக ரஜினிகாந்த் படத்தில் காட்ட
இருப்பதாக நான் அறிந்தேன், அவ்வாறு காண்பித்தால் கடுமையான விளைவுகளை
சந்திக்க நேரிடும், என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சேகர் சுந்தருக்கு பதில் அளிக்கும் வகையில், தனுஷ்
தரப்பில் இருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,
எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை
பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள்
வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான்
அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி
வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.
அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன்
திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம்
(Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே.
இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ
சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.
குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும்
அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.இது
சம்பந்தமாக படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு
கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல"
என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை" என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி
வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்.” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment