Thursday, May 11, 2017

மாணிக்க மடு , மாயக்கல் பிரதேசத்தில் திடீரென ஒரு புத்தர் சிலையை வைத்து புத்த பிக்குகள் வழிபட ஆரம்பித்தார்கள். இதனை கண்டு கொதித்து எழுந்த தமிழ் இளைஞர்கள் சிலர் சிலையை உடைக்க, அங்கே பெரும் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிசார் அங்கே குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பிரதேசங்களில் இவ்வாறு புத்தர் சிலை முளைப்பதும். அதனை தொடர்ந்து அங்கே புத்த பிக்குகள் மற்றும் சிங்கள குடும்பங்கள் குடியேறுவதும் வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு இந்த தமிழ் பிரதேசமும் புத்த பிக்குகள் பக்கம் சென்றுவிடும் என்று அங்குள்ள தமிழர்கள் எண்ணியதில் தவறில்லை. இன் நிலையில் பொலிசார் கடும் கட்டுப்பாடுகளை அங்கே விதித்திருந்தார்கள். இன முரன்பாடு ஏற்படும் எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அங்கே புத்த பிக்குகள் செல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து இருந்தார்கள்.

ஆனால் அதனையும் மீறி புத்த பிக்குகள் நேற்று மாலை அவ்விடம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு. பெளவுத்த கொடிகளை தாங்கி நின்று அப்பிரதேசம் தமக்கே சொந்தம் எனக் கோஷமிட்டுள்ளார்கள். ஈனத் தமிழர்கள் என்ன சொல்வது ? எமக்கு கட்டளையிட வேண்டாம் எனவும். இது ஒரு பெளத்த நாடு எனவும் அவர்கள் கோஷமிட்டுள்ளார்கள். மீண்டும் புத்தர் சிலை வைத்தால் , அதனை மீண்டும் நாம் உடைப்போம் என தமிழர் இளைஞர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer