எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் ஏதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துக்கு இல்லை என்றும் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் கடந்த பொதுத் தேர்தல் காலத்திலிருந்து இருந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையிலேயே, சிவஞானம் சிறீதரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. எனினும், கட்சியின் உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment