Tuesday, May 2, 2017

‘மண்டோதரி’ திகில் படத்திற்கு திரைக்கதை , வசனம் எழுதி, இணை இயக்குநராகவும், கதையின் நாயகனாகவும் நடித்தவர் பா.ரஞ்சித்குமார். இவர், தனது பெயரை பா.ராகவா ரஞ்சித் என்று மாற்றிக்கொண்டு தயாரித்து - இயக்கி வரும் படம், ’பேய் இருக்கா இல்லையா’. படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் பணியில் இருந்த ரஞ்சித்திடம், படத்தின் தலைப்பையே கேள்வியாக அவர் முன் வைத்தபோது,

‘’கடவுளை நேரில் பார்த்தேன்னு சொன்னா நம்ம மறுக்கிறவங்க கூட, பேயை பார்த்தேன்னு சொன்னா, அப்படியா’ன்னு உடனே நம்பிடுறாங்க.  அப்படின்னா பேய்ங்கிறது என்ன, அது மூட நம்பிக்கையா, இல்லை அமானுஷ்ய சக்தியா? அல்லது வாழ்ந்து முடித்தவர்களின் ஆத்மாவா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திரைக்கதை அமைத்துள்ளேன்.  
படம் முழுவதும் சென்னையை  கதையின் களமாக கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடிச்சிருக்கோம்.  பாடல் காட்சிகள் மதுரை, அலங்காநல்லூர் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. பின்னணி குரல் சேர்ப்பு மற்றும் கிராபிக்ஸ், பின்னணி இசை சேர்ப்பு போன்ற இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறோம்.

மண்டோதரி படத்துல இரண்டாவது கதை நாயகனா நடிச்ச அமர், இதுல கதை நாயகனா நடிச்சிருக்கார். ‘அஞ்சுக்கு ஒன்னு’, ‘ என்னை பிரியாதே’ படங்களிலும் கதை நாயகனாக நடிச்சிருக்கார்.  ‘அம்புலி 3D’ படத்துல நடிச்ச ஜோதிஷா நாயகியாக நடிச்சிருக்காங்க.  சுரேஷ்குமா, சதா, பிந்துரோஷினி, கீர்த்தி கௌடான்னு சில புதுமுகங்களோட விஜயகுமார், லிவிங்ஸ்டன், மதன்பாபு, லொல்லு சபா சுவாமிநாதன், பொன்னம்பலம், கொட்டாச்சி, தாடிபாலாஜி, ஜாங்கிரி மதுமிதா, அனுமோகன், கூல் சுரேஷ், வின்செண்ட்ராய், ரேகா சுரேஷ்னு ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சு கலக்கி இருக்காங்க’’ என்றார்.

’மண்டோதரி’, ’பேய் இருக்கா இல்லையா’ன்னு ஏன் தொடர்ந்து பேய் சப்ஜெக்ட்?

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார்கிட்ட வொர்க் பண்ணிவிட்டு, ஆக்‌ஷன் கிங் அர்ஜூர் சார்கிட்ட சப்ஜெக்ட் சொல்லுவதற்காக, ஆக்‌ஷன் சப்ஜெக்ட் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல எதேச்சையாக ஆரம்பகால நண்பர் சம்பத் சாரை சந்திச்சேன்.  ‘யார் அது?’ என்ற திகில் படத்தை தயாரித்து இயக்கின விசயத்தை என்னிடம் சொன்னார்.  சின்ன பட்ஜெட்டுல பேய் படம் எடுத்துடலாம்.  நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமா? என்று கேட்டார்.  அது வெறும் பேச்சோடு இல்லாமல், ‘மண்டோதரி’ என்ற திகில் படத்தை எடுத்து முடிக்கும் அளவுக்கு போனது.   அதுல ஆக்ஸிடெண்டா நான் கதையின் நாயகனா நடிக்க வேண்டியதாயிடுச்சு. ரொம்ப சின்ன பட்ஜெட்டுல எடுத்த அந்தப்படம் நல்ல லாபத்தை கொடுத்துச்சு.   அந்த சந்தோசத்துலதான், பேய் இருக்கா இல்லையா?ன்னு சொந்தமா தயாரிச்சு, இயக்கியிருக்கிறேன்.

அடுத்ததும் பேய்’ தானா?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மன்னார்குடி. என் தாத்தா பிச்சைக்கண்ணு நாடக வாத்தியார். அவர் கொடுத்த ஊக்கத்தினால படிக்கும்போதே நாடகங்களில் நடிச்சேன். அப்புறம் சொந்தமா நாடகங்கள் நடத்தினேன். இந்த அனுபவத்துல சென்னை வந்து, நடிகை மும்தாஜ் தயாரிப்பில், ‘தத்தி தாவுது மனசு’, படத்தில் வொர்க் பண்ணினேன். அப்புறம், பாண்டியராஜன் சார் நடித்த ‘அன்புத்தொல்லை’ படத்துல வொர்க் பண்ணிவிட்டு, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரிடம் துரை, வாத்தியா, சிங்கக்குட்டி, வாடா, கில்லாடி, மலைமலை படங்களில் வொர்க் பண்ணினேன்.

நான் இயக்க வேண்டும் என்று நினைச்சு வந்த கதைகள் இன்னும் அப்படியே இருக்கு. அந்த கதைக்குத்தான் ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறேன். இனி பேய் படங்கள் எடுக்க மாட்டேன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer