Saturday, May 27, 2017

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அந்தப்படம் சுமாராக ஓடினாலும், தஸ்தூருக்கு ஒரு நல்லதும் நடக்கவில்லை கோடம்பாக்கத்தில். காரணம், அவர் வந்து போகும் செலவு, அவருடன் வந்து போகிறவர்களுக்கு ஏர் டிக்கெட்.

ஸ்டார் ஓட்டல் அலப்பறை என்று நடுநடுங்க விட்டதுதான் காரணம்.

எல்லா தவறையும் அவருக்கு பொறுமையாக எடுத்துச் சொன்ன நட்பு வட்டாரம் “மீண்டும் மொதல்லேர்ந்து ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க... “ஓ ஜோரா” என்றார் அவர்.

அப்புறமென்ன? சந்தானத்துடன் ஜோடி சேர்த்துவிட்டுவிட்டார்கள்.

ஓடி ஓடி உழைக்கணும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அப்படத்திற்காக ஊட்டியில் எடுக்க வேண்டிய பாடலை கூட, நம்ம சென்னை செம்மொழி பூங்காவுல முடிக்கிற அளவுக்கு பட்ஜெட்டை சுருக்கிவிட்டார்கள்.

இருந்தாலும், அமைராவுக்கு கேரவேன் கொடுக்கறதுல குறை வைக்கல என்பதுதான் நிம்மதியோ நிம்மதி.

0 comments :

Post a Comment

 
Toggle Footer