நடிகை ஸ்ரேயா காதலில் விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்கிற படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர் ஏராளமான படங்களில் நடித்தார்.
தற்போது அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாததால், சினிமாவில் நடிக்கவில்லை. எனவே, அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், அவருக்காக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன்,
அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றது. சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு ஜோடியாக வந்த அவர்கள், வெகுநேரம் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின் ஒரே காரில் அவர்கள் இருவரும் கிளம்பி சென்றனர்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment