ஆணானப்பட்ட உதயநிதிக்கே, நோ சொல்லிட்டாரா? வாவ்... என்று எஸ்.எழிலை பார்த்து வியக்கிறது ஊர். ஏன்? விஷயம் அப்படி. பொதுவாகவே எல்லாரையும் அனுசரித்துப் போகக் கூடியவர் உதயநிதி ஸ்டாலின்.
தனது பேக்ரவுண்ட் பெருமையை ஒருபோதும் அவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் காட்டியதில்லை.
அந்தளவுக்கு எளிமையோ எளிமை! அப்படிப்பட்டவர் ஸ்பாட்டில் இருக்கும்போது வெயிலில் வாட விடுவாரா என்று நம்பிப் போன சிருஷ்டி டாங்கேவுக்கு செம மூக்குடைப்பு.
உதயநிதியுடன் சிருஷ்டி டாங்கே, ரெஜினா கெசன்ட்ரா ஆகியோர் நடித்திருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது.
சந்தோஷமாக போய் இறங்கிய சிருஷ்டிக்கு செம ஷாக்.
நோ கேரவேன். வெயில் கொளுத்தி எடுக்க... ஓதுங்க கொஞ்சம் நிழல் மட்டும்தான் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.
அருகிலிருந்த உதயநிதியை உதவிய நிதியாக்குவதற்கு ட்ரை பண்ணினார் சிருஷ்டி.
முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை எடுத்துக் கொடுக்கும் எழில், “கேரவேன் வச்சுக்கலாமே?” என்று கேட்ட உதயநிதியிடம், “பட்ஜெட் இல்ல சார்” என்று கூறிவிட்டாராம்.
அப்புறம்? அந்த சீமைத் தக்காளி அடித்த வெயிலில் வெந்தேதான் ஊர் திரும்பியது.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment