Sunday, May 7, 2017

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அநீதிக் கதைகள் படத்தை இயக்கி வருகிறார். அநீதிக் கதைகள் திரைப்படத்தில் சமந்தா, இயக்குனர் மிஷ்கின், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவின் ஜாம்பவான் என்று கருதப்படும் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா ஆகிய மூன்று இயக்குனர்களும் இணைந்து வசனம் எழுதுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத் தொகுப்பாளராக சத்தியராஜ் நடராஜன். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் கலை இயக்குனராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படத்தை பற்றி தியாகராஜன் குமாரராஜா கூறுகையில் அநீதி கதைகள் வணிக ரீதியான படமாகத்தான் இருக்கப் போகிறது என்றார்.

விஜய் சேதுபதி, தர்மதுரை, கவண் வெற்றிகளைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இதற்கு முன்பு இயக்கிய ஆரண்ய காண்டம் சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற படம். இருவரும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக  காத்திருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer