Monday, May 29, 2017

ரஜினி பேன்ஸ் மீட்! ராகவேந்திரா மண்டபத்தில் திருவிழா போல நடந்து முடிந்த அந்த நிகழ்ச்சியால் ரஜினிக்கும் உற்சாகம், ரசிகர்களுக்கும் உற்சாகம். இருந்தாலும் அவர்களது அன்பு மிகுதியால் கதிகலங்கிப் போனார் ரஜினி.

எப்படி? வெறுங்கையோடு போகக் கூடாது என்று நினைத்த சிலர், ரஜினிக்காக ஸ்பெஷலான உத்திராட்ச மாலை, ஒரிஜனல் ஸ்படிக மாலை ஏன்று ஏகப்பட்ட ஐட்டங்களோடு வந்துவிட்டார்கள்.

அதை தன் கையாலேயே அவர் கழுத்தில் மாட்டவும் ஆசை அவர்களுக்கு.

ஆனால் இப்படி கண்டதையும் போட்டு, கஷ்டத்தை வாங்கிக் கொள்ள அவர் என்ன ஒன்றும் தெரியாதவரா? மாலை மற்றும் ‘மணி’ பார்சலோடு வந்தவர்களை அருகில் அழைத்து பொறுமையாக ஒரு விஷயம் சொல்லியனுப்பினார்.

என்னவென்று? “கண்ணா... நான் இமயமலையில் ஒரு ஸ்வாமிஜிகிட்ட இருந்து வாங்குனதைதான் போட்டுகிட்டு இருக்கேன்.

வேறு எதையும் அணியறதில்ல. கோவிச்சுக்கக் கூடாது. ப்ளீஸ்” என்றபடி, அதை அவர்களுக்கே மாட்டி அனுப்பினார். நழுவுறதுல நம்மாளை அடிச்சுக்க முடியுமாய்யா...

0 comments :

Post a Comment

 
Toggle Footer