சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தான் பிரபல நடிகையான பவானி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார், குடும்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேறொரு நபருடன் தொடர்பா? பிரபல சீரியல் நடிகர் தற்கொலையில் மர்மம்.
பிரபல தெலுங்கு சீரியல் நடிகரான பிரதீப் குமார் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாதிக்க துடிக்கும் இளைஞரான பிரதீப் இறந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருமணமாகி ஒரு வருடம் கூட முடியாத நிலையில் பிரதீப் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவியான பவானி ரெட்டி கூறுகையில், எனக்கும், என் கணவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது, இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவதினத்தன்று அதிகளவு மது குடித்ததாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களது வீட்டில் Sravan என்ற நபர் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்ததாகவும், இதுவே கணவன்- மனைவிக்கு இடையே தகராறுக்கு காரணம் எனவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment