Tuesday, May 9, 2017

நான் எந்த டைரியும் எழுதினது இல்லை என்று சிறையில் இருக்கும் சேகர்
ரெட்டி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்க்கொண்டபோது டைரி
ஒன்று சிக்கியதாகவும், அதில் தமிழக அமைச்சர்கள் சிலரது பெயர்கள்
இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் அமைச்சர்கள் ஏகத்துக்கும்
டென்ஷனில் இருந்தார்கள். இன்று காலை முதல்வர் பழனிசாமி தலைமைச்
செயலகத்துக்குப் போனதும் அமைச்சர்கள் பலரும் அங்கே போனார்கள். எல்லோருடைய
முகத்திலும் டென்ஷன் அப்பட்டமாக தெரிந்தது.

அமைச்சர்கள் பதற்றத்துடன் விசாரித்து இருக்கிறார்கள். அதற்கு முதல்வர்
பழனிசாமி, ‘இந்த தகவல் வெளியானதும் நானே விசாரிச்சுட்டேன். அப்படி
எதுவும் இல்லையாம். சிறையில் இருக்கும் சேகர் ரெட்டியிடமும் இது
சம்பந்தமாக கேட்டு இருக்கிறார்கள். நான் எந்த டைரியும் எழுதினது இல்லை.
அப்படி எதுவும் சிக்க வாய்ப்பே இல்லை என்று அவர் சொல்லி இருக்கார் என்று
எல்லோருக்கும் தைரியம் சொல்லி அனுப்பி இருக்கிறார் முதல்வர் பழனிசாமி!’

0 comments :

Post a Comment

 
Toggle Footer