Monday, May 8, 2017

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குறைத்திருந்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுமொன்றைத் தாக்கல் செய்ததன் மூலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பினைக் குறைத்திருந்தார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புக்கு 30 பேரை மாத்திரமே நியமித்திருந்தார். குண்டுத் தாக்குதலுக்கு ஏற்கனவே இலக்காகியிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பினை வெகுவாக குறைத்துவிட்டு, தற்போது அவர் புலம்பிக் கொண்டிருக்கின்றார்.” என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer