‘முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.’ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது எவ்வாறான நாடகம் ஆடினாலும் பரவாயில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான நாடகத்தை நடிப்பதற்கு வந்தால், அதற்கான தாளத்தை நாம் காண்பிப்போம் என்றும் அவர் எச்சரிக்கைத் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ருவான் விஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், அவ்வப்போது எங்களுடைய இராணுவத்தை விமர்சிக்கின்றனர். எனினும், துன்பப்படுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுக்கு, முப்படையினரே உதவுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐந்து அல்லது ஆறு பேரை சேர்த்துக்கொண்டு, விளக்குகளை ஏற்றிக்கொண்டு எங்களுடைய படையினரை விமர்சனத்துக்கு உட்படுத்துவதையிட்டு நாங்கள் வருத்தமடைக்கின்றோம். எனினும், முப்படையினராலும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தமையால் தான், அவரால், அந்த நாடகத்தை நடிக்க முடிந்துள்ளது என்பதனை அவர் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
தற்போது எவ்வாறான நாடகம் ஆடினாலும் பரவாயில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான நாடகத்தை நடிப்பதற்கு வந்தால், அதற்கான தாளத்தை நாம் காண்பிப்போம். முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்றுள்ளார்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment