முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர்பதவி வழங்கினால், தான் கட்சியிலிருந்து விலகுவேன் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக சரத் பொன்சேகாவை எதிர்வரும் வாரமளவில் ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே, சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்கப்பட்டால் தன்னுடைய கட்சி உறுப்புரிமையை விலக்கிக் கொள்ளவேன் என்று விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
“கட்சியின் துணைத் தலைவர் பதவியில் சரத் பொன்சேகாவை அமர்த்தக் கூடாது. நெருக்கடியான தருணத்தில் நான் கட்சியில் இணைந்து கொண்டு சேவையாற்றியுள்ளேன்.” என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கும், விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்கினால், ஐ.தே.க.விலிருந்து விலகுவேன்: விஜயதாச ராஜபக்ஷ
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment