கம்பஹாவின் வெலிவேரிய ரத்துபஸ்வல பகுதியில் 2013ஆம் ஆண்டு குடிநீருக்காகப் போராடி மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைவர் என்று குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு இராணுவப் பிரிகேடியர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 33 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமானவர்களுள் 14 வயது மாணவன் ஒருவரும் அடங்குவதுடன் இச்சம்பவத்தில் இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரும், சார்ஜண்ட் ஒருவருமே குற்ற விசாரணை திணைக்களத்தினால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேசத்தில் செயற்பட்டு வந்த தொழிற்சாலை காரணமாக நிலத்தடிநீரில் இரசாயனம் கலப்பதாக குற்றம் சுமத்தியும் சுத்தமான குடிநீரை வழங்குமாறும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்போது அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இத் தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போதே மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் காயமடைந்தனர்.
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment