Sunday, May 7, 2017

நீட் தேர்வு இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதது. தேர்வு மையத்தினுள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள், பட்டியலில் தொட்டு, முக்குத்தி மட்டுமன்றி பேனாவும் இடம்பெற்றுள்ளது.
தேர்வு மையத்தினுள் சரியா‌க ‌‌9.‌30 மணிக்கெல்லாம் இருக்க வேண்டும்.
தாமதமாக வருவோர், உள்ளே அனுமதிக்கப்படவில்லாய்.
காகிதத் துண்டுகள், பென்சில் டப்பா உள்ளிட்ட அனைத்து வித ‌டப்பாக்கள்‌,
பவுச், ‌கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், அட்டை, பெண் டிரைவ், அழிப்பான்,
லாக் அட்டவணை, ஸ்கேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு சாதனங்களான கைபேசி, ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன்,
பேஜர், ஹெல்த் பேண்ட் உள்ளிட்டவைகளையும் எடுத்துசெல்லக் கூடாது. பெல்ட்,
தொப்பி, கைப்பைகள், கண்ணாடிகள், வாலட் உள்ளிட்டவற்றிற்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர்,
பேட்ஜ், சட்டை பின் உள்ளிட்ட அணிகலன்களை பயன்படுத்தக் கூடாது.

கைக்கடிகாரம், ப்ரேஸ்லெட், புகைப்படக் கருவி எடுத்துவரக் கூடாது.
எந்தவிதமான உலோக பொருட்களையும் கொண்டுவரக் கூடாது. தின்பண்டங்கள்,
தண்ணீர் பாட்டில்களும் அனுமதிக்கப்படாது._
அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிய வேண்டும். ஆடையில் பெரிய
பொத்தான்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகை
காலணிகளை அணியக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் குறிப்பிட்ட
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ
தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer