வேறொரு நடிகராக இருந்திருந்தால், ‘ஐயோ என் கால்ஷீட் தேதியெல்லாம் வீணாப் போச்சே’ என்று கதறியிருப்பார். ஆனால் கூல் ராஜ்கிரண்தான் எப்பவும். பா.பாண்டி படத்தின் முதல் பகுதியை பெரும் வரவேற்பு கொடுத்து கொண்டாடிவிட்டது திரையுலகம்.
கலெக்ஷனும் ஓரளவுக்கு பரவாயில்லை என்கிறார்கள். மிகுந்த பாராட்டுகளுக்கு இடையில், ரஜினியின் பாராட்டுதான் மருமகனுக்கு முக்கியம்.
“இந்தப் படத்தின் புகழை குறைக்கிற மாதிரி இன்னொரு படம் அமையக்கூடாது.
அதனால் டைரக்ஷனை பத்து வருஷத்துக்காவது தள்ளிப் போடுங்க” என்று ரஜினி கேட்டுக் கொண்டாராம் தனுஷிடம். இந்த மாதமே பார்ட்2 படப்பிடிப்புக்கு கிளம்புவதாக இருந்த தனுஷ், ரஜினி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி படத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போட்டுவிட்டார்.
இதனால் வீணாய் போனது ராஜ்கிரணின் கால்ஷீட் தேதிகள்தான். ஆனால் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை அவர். படு கூல்!
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment