தென்னிலங்கையில் பல சிங்கள பகுதியில், கால நிலை குழம்பியுள்ளது. கடும் காற்று மழை , மண் சரிவு என்று சுமார் 180 பேரை அது பழிவாங்கியுள்ள நிலையில். வெந்த புண்ணில் வேல் பாய்வது என்பார்கள் சிலர். அதுபோல பத்தேகமவில் சிங்களவரை காப்பாற்ற சென்ற ஹெலிகொப்டரே விழுந்துள்ளது.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், குறித்த ஹெலிகொப்டர் எந்திரக் கோளாறு காரணமாக சடுதியாக தரை இறங்கியதாகவும். விமானி பெரும் வீர தீர செயல்களில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக தரை இறக்கியதாகவும் இலங்கை ராணுவ இணையம் புகழ் பாடியுள்ளது. ஆனால் ஹெலி பறந்துகொண்டு இருந்தவேளை, அதன் காத்தாடிகளில் ஒன்று முதலில் களன்று விழுந்ததாகவும்.
அதனை தொடர்ந்தே அது அவசரமாக தரையிறங்கியதாகவும் உள்ளூர் சிங்கள வாசிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களே விபத்தை நேரில் பார்த்தவர்கள். ஆனால் ராணுவத்தினர் இயந்திர கோளாறு என்கிறார்கள். இலங்கை விமானப்படையினர் அதி நவீன ஹெலி கொப்டர்களை வைத்திருந்தும் கூட அதனை சுற்றுலாவுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மீட்ப்பு பணிகளுக்கு அவர்கள் வழங்கும் ஹெலிகொப்டர்கள் மிக மிக பழயவை என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment