Monday, May 1, 2017

கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 15 வரை வழக்கறிஞர்களை தவிர 19 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துள்ளனர். ஆனால் ஏப்ரல் 15-க்கு பின்னர் 14 நாட்களில் 3 பேர் மட்டுமே அவரை பார்த்து பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சசிகலாவை ஏராளமானோர் சிறையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சந்தி்த்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, தற்போது சிறை அதிகாரிகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கான எந்த சலுகையும் சசிகலாவுக்கு வழங்கவில்லை என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினகரன் விவகாரம், அதிமுகவில் இரு அணிகள் உருவாகி ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் சசிகலாவை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைக்கு வந்தபோது இருந்த நம்பிக்கை தற்போது குறைந்துவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer