வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாகாண அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த விசாரணைக்குழு தான் மேற்கொண்ட விசாரணைகளுக்குப் பின்னர் விசாரணை அறிக்கையை அண்மையில் முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த நிலையிலேயே, குறித்த அறிக்கையை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ப.சத்தியலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
“குறித்த விசாரணையில் என்ன நடந்தது என்று அறிய மக்கள் ஆவலாகவுள்ளனர். அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என்று அனைவரும் அறியவேண்டும். எனவே முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. விசாரணை அறிக்கை முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னரே பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்னரே மின்னஞ்சல் மூலமாகக் கோரியிருந்தேன்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: ப.சத்தியலிங்கம்
Tuesday, May 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment