பிரித்தானியாவில் பல வருடங்களுக்குப் பின்னர் தற்போது, முக்கிய இடங்களை பாதுகாக்க ராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளார்கள். நேற்று முன் தினம் மான்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து. அன் நபரின் அப்பா அம்மா, மற்றும் சகோதரர்களை லிபியாவில் கைதாகியுள்ளார்கள். குண்டு வெடித்து அடுத்த 1 மணி நேரத்தில் அவரது உறவினர்கள் எந்த நாட்டில் உள்ளார்கள் என்று அறிந்துகொண்ட பிரித்தானிய உளவுத்துறை. லிபிய நாட்டுக்கு தகவல் அனுப்ப. அவர்கள் உடனடியாக பெற்றோர் மற்றும் சகோதரர்களை கைதுசெய்துள்ளார்கள்.
இதேவேளை கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கூட என் மகனோடு பேசி இருந்தேன். அவன் நல்ல நிலையில் தான் இருந்தான் என்றும். இஸ்லாம் பெயரால் ஆட்களைக் கொல்வது என்பது எனக்கு ஏற்புடைய விடையம் அல்ல என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக லண்டன் மற்றும் முக்கிய நகரங்களில் பிரித்தானிய ராணுவத்தினர் தற்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சொல்லப்போனால் லண்டன் விரையில் கொழும்பு போல மாறலாம் என்கிறார்கள்.
Thursday, May 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment