நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'தேவி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து தொடர்ந்து பிரபு தேவா நடிப்பு பணியை தொடருவாரா..? அல்லது மீண்டும் படங்களை இயக்க சென்றுவிடுவாரா..? என்ற கேள்வி பலரிடமும் நிலவி வந்தது . இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ‘எங் மங் சங்’ என்ற படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். மேலும் கார்த்தி, விஷால் ஆகிய இருவரையும் வைத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தையும் இயக்கவுள்ளார். எனவே இரண்டையுமே இனி அவர் தொடர்ந்து செய்வார் என தெரிந்துள்ள நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் வடசென்னை, விஐபி 2, எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால். அந்த படத்திற்கான பணிகளை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ள கார்த்திக் சுப்புராஜ்.. இப்போது பிரபுதேவாவை இயக்க தயாராகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை இம்மாத இறுதியில் பாண்டிச்சேரியில் துவங்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்ட்டுள்ளாராம்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment