சிறுக சிறுக சேமித்து காசை உழைத்து. ராடன் என்னும் கம்பெனியை தனது உழைப்பால் உயர்த்தியவர் ராதிகா. அவர் கெட்ட நேரம் அவர் மணம் முடித்த, சரத் குமாரால் தான் வந்துள்ளது. தினகரனோடு இணைந்து செயல்பட்டு 300 கோடி பேரம் பேசி. அதில் சில கோடிகளை வாங்கிய சில நாட்களிலேயே. வருமான வரி அதிகாரிகள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். இதனால் ராடன் மீடியாவின் ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றதோடு. வங்கியில் இருந்த பணத்தையும் முடக்கிவிட்டார்கள். விசாரணை முடியும் வரை பணத்தை தொட முடியாத நிலை தோன்றியுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட காசு இல்லாமல் அல்லாடுகிறார் ராதிகா.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டு நாட்கள் யோசித்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார் சரத்குமார். இதையடுத்து சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர், நான் தனியாக நிற்க போகிறேன், யாருக்காவது ஆதரவு வேண்டுமானால் தன்னை தேடி வரட்டும் என தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். பின்னர், ஒ.பி.எஸ்சை பதவியை விட்டு தூக்கியது குறித்து சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த சரத், அடுத்த சில நாட்களில் சசிகலாவின் பினாமி தினகரனிடம் தஞ்சம் அடைந்தார்.
இவர் ஆதரவு கொடுத்த நேரமோ என்னமோ டிடிவி தினகரனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போகும்போது சும்மா இருந்த நாயை "தூ" என்று சொல்லிட்டு போ என்ற பழமொழிக்கு ஏற்ப சசிகலா ஜெயிலுக்கு போகும்போது தினகரனை கை காட்டிவிட்டு சென்றார். தற்போது தினகரன் ஜெயிலுக்கு போகும்போது சரத்குமாரை கை காட்டி விட்டு சென்று விட்டார் போலும். ஒ.பி.எஸ்சிடமும் தினகரனிடமும் பேரம் பேசிய சரத்குமாருக்கு டிடிவி தரப்பு தான் வாரி வாரி கொடுத்ததாம். இதையறிந்த வருமான வரித்துறை இனியும் விட்டு வைக்க கூடாது என்று அதிகாரத்தை கையில் எடுத்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். பல்கலைகழக துணைவேந்தரை அடுத்து சரத்குமார் வீட்டில் புகுந்தது வருமான வரித்துறை அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. என்ன செய்வது சேர்க்கை சரி இல்லை என்றால் இப்படி தான்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment