தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் பல வழிகளையும் திறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நாட்டில் மீண்டும் செயற்படக் கூடிய விடுதலைப் புலி உறுப்பினர்களையே எனது அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது. அவர்களை தற்போதைய அரசாங்கம் விடுவித்துள்ளமையால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பை குறைக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் நான் மனுதாக்கல் செய்திருந்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதனை அரச சார்பற்ற நிறுவனமொன்றே தாக்கல் செய்திருந்தது. மாறாக, கடந்த ஆட்சிக்காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கோரிக்கைக்கு அமைவாக, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment