தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சில காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமானார். அவருக்கு வயது 84. அவரது இறுதிக் கிரிகைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
குமார் பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின்னர், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவராகவும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி குறிப்பிட்ட காலம் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமானபோது அவரும் அதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
Monday, May 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment