சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில், முதலாளியே ஆடும் அந்த காட்சியை தமிழ்நாடே சறுக்கி சறுக்கி ஆடி சந்தோஷமாக ரசித்து வருகிறது.
போதும் போதாமைக்கு அவரே ஒரு பிரஸ்மீட்டில் ‘நயன்தாராவுடன் நடிப்பேன்’ என்று சொல்லப் போக.... ‘விட்டேனா பார்’ என்று விழுந்து விழுந்து கவலைப்பட ஆரம்பித்தார்கள் நயன் ரசிகர்கள்.
சோஷியல் மீடியாவில் இதற்கு கடும் எதிர்ப்பு வேறு. ஆனால், மேற்படி முதலாளியுடன் அவ்விளம்பரத்தில் ஆடிய தமன்னா, ஹன்சிகா இருவருக்கும் கடும் ஷாக். ‘எங்க இரண்டு பேர்ல ஒரு பேரை சொல்லியிருக்கலாம்ல?’ என்றார்களாம்.
இருந்தாலும் வேறு வழி? அடுத்து புதிதாக எடுக்கப்பட்ட இன்னொரு விளம்பரத்தில், “வாங்க ஹீரோ சார்...” என்று அவர்கள் அழைப்பதாகதான் அந்த விளம்பரமே துவங்குகிறதாம். என்னவோ ஒரு முடிவுல இருக்காங்க எல்லாரும்!
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment