சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கான கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள ஜெனிவா மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா மாகாணத்தில் வசித்து வந்த வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவதற்காக இதுவரை வயது மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.
அதாவது, 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 920 பிராங்கும், 25 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 500 பிராங்கும் கட்டணமாக செலுத்தி வந்துள்ளனர்.
அதே போல், இந்தக் கட்டணமானது ஆண்டு வருமானமாக 40,000 பிராங்க் பெறுபவர்களுக்கு இரண்டு மடங்காகவும், 80,000 பிராங்க் பெறுபவர்களுக்கு மூன்று மடங்காகவும், 1,20,000 பிராங்க் பெறுபவர்களுக்கு நான்கு மடங்காகவும் கட்டணம் வாங்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை தவிர 480 பிராங்க் வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது இந்தக் கட்டணத்தில் ஒரு அதிரடி மாற்றம் வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 27-ம் திகதி ஜெனிவா மாகாண அரசு ஒரு அதிரடி சட்டத்தைக் கொண்டு வந்தது.
இச்சட்டத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
எதிர்வரும் யூன் 1-ம் திகதி முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.
அதாவது, குடியுரிமை பெறுவதற்காக இதுவரை கட்டணமாக 4,160 பிராங்க் செலுத்தியவர்கள் இனிமேல் 1,250 பிராங்க் மட்டுமே செலுத்த வேண்டும்.
மேலும், 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 850 பிராங்க் வரை மட்டுமே கட்டணமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த புதிய கட்டண சலுகை ஜெனிவா மாகாணத்தில் மட்டும் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment