Thursday, May 11, 2017

பாகுபலி வந்தாலும் வந்தது. பாதி பேருக்கு சந்தோஷம். மீதி பேருக்கு சந்தேகம் என்றாகிவிட்டது வாழ்க்கை. இந்த சம்மரை குறி வைத்து தங்கள் படங்களை ரிலீஸ் செய்துவிடலாம் என்று கணக்குப் போட்ட கலையரசன் நடித்த எய்தவன் என்ற படமும், சமுத்திரக்கனி நடித்த தொண்டன் என்ற படமும் 5 ந் தேதி ரிலீசுக்கு தயாராகிவிட்டன.

இந்த ரேசில் கடைசி நேரத்தில் இணைந்து மூன்று படங்கள் தயார்.

ஆனால் பாகுபலி2 வின் கலெக்ஷன், ரெண்டாவது வாரமும் சிறப்பாக தொடரும் என்பதை கண்டுணர்ந்த தியேட்டர்காரர்கள் உங்க படத்தை அடுத்த வாரம் வச்சுக்கோங்க என்று கூறிவிட்டார்களாம்.

மூணு கோடியில் எடுத்த படத்தையெல்லாம், முன்னூறு கோடியில் எடுத்த படங்கள் வந்து காலி பண்ணினால், ஊரை காலி பண்ணிவிட்டு ஓட வேண்டியதுதான் என்ற புலம்பல் சப்தம் கேட்கிறது.

வெள்ளமே வந்தா கூட, வேஷ்டிய நனைக்கவிடாமல் தடுக்கிற ஊரு இது. வாழ்ந்துருவீங்க!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer