இவ்வாரம் நாடு கடந்து இந்தியாவில் வாழ்ந்து வரும் திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்காவின் காங்கிரஸ் சட்ட வல்லுனர் குழு ஒன்று அவரது தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து இருந்தது.
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சீன அரசு இன்று புதன்கிழமை அமெரிக்க அரசுக்குத் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனநாயக இல்லத் தலைவரான நான்ஸி பெலோசி தனது சட்ட வல்லுனர் குழுவுடன் 81 வயதாகும் தலாய் லாமாவை இமாலய மலைப் பகுதியில் அவர் தங்கியுள்ள இந்தியக் கிராமத்துக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீப காலமாக சீனாவுடனான தனது நல்லுறவை வலுப்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை திபேத்தில் மனித உரிமைகளை நிலை நாட்டும் விதத்தில் திசை திருப்பும் முயற்சியாக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தலாய் லாமாவை சீன அரசு எப்போதும் மிக ஆபத்தான ஒரு பிரிவினை வாதியாகவே சித்தரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சீனாவிடம் இருந்து பிரிவினையைப் பெறுவதற்கு ஒரு கருவியாக அவர் மதத்தைப் பயன் படுத்துகின்றார் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திபேத் விவகாரத்தை அமெரிக்கா மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் தலாய் லாமாவுடனான அனைத்துத் தொடர்புகளையும் உடனே ரத்து செய்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சட்ட வல்லுனர்கள் விஜயத்தையும் உடனே நிறுத்த வேண்டும் என்று சீனா அமெரிக்காவுக்கு அழுத்தம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
தலாய் லாமாவை சந்திக்க அமெரிக்க சட்ட வல்லுனர்கள் விஜயம் செய்ததற்கு சீனா எதிர்ப்பு!
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment