மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரி, காந்தினி சித்ரானி ராஜபக்ஷ ரணவக்க காலமாகியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே இறப்புக்கு காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அவரை திடீரென வைத்தியசாலையின் அதி தீர்விர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்கள். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்துள்ளார்.
அவருக்கு வயது 58 ஆகும். இன் நிலையில் இச்சம்பவம், மகிந்தவுக்கு பெரும் இடியாக தலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏன் எனில் மகிந்தவின் பல உறவினர்கள் மாரடைப்பால் தான் மண்டையை பொட்டுள்ளார்கள் என்பது வரலாறு. இதன் காரணமாகவே மகிந்த அடிக்கடி பல உடல் பயிற்சிகளை எடுப்பது வழக்கம். ஆனால் விதி யாரை விட்டது ? இச்செய்தி கேட்டு அதிர்ந்துபோன அவர் உடனே தனியார் வைத்தியசாலை சென்று பூதவுடலை பார்வையிட்டுள்ளார்.
பூதவுடல் நுகேகொட எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்கா வைக்கப்படவுள்ள நிலையில், இறுதிக் கிரியை நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக மேலும் அறிகிறது.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment