Sunday, May 7, 2017

இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு, மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா சென்று ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நக்மா, “இது வெறும் சாதாரண சந்திப்பு தான். நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் மற்றும் இணைந்து பணிபுரிந்திருக்கிறோம் என்பதால், அந்த முறையிலேயே இந்த சந்திப்பும் இருந்தது. இதில் எந்தவித அரசியல் கலப்பும் இல்லை. அதுமாதிரியான எந்தவித பேச்சுவார்த்தையும் உள்ளே நடைபெறவில்லை” என்றார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் அறிவித்துள்ளது பெண்களை இழிவுபடுத்தும் செயலாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல் அனுப்பப்படும் என ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்தார். தற்போதைய பிரதமர் மோடி தனக்கு 56 இன்ச் மார்பு உள்ளதாகச் சொல்கிறார். ஆனால், வீரர்களின் மரணம் 5மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் இதுகுறித்து அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்? எனவே தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்தோம்” என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer