Saturday, May 13, 2017

குஜராத்தில் மகாத்மா காந்தி ஏழு ஆண்டுகள் படித்த பள்ளியை மூடி விட்டு,
அதை உலக தரம் வாய்ந்த பள்ளியாக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில், 1875ம் ஆண்டில் அப்போதைய
ஜுனாகந்த் சமஸ்தானம் மூலம், ஆல்பிரட் உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட்டது.
இப்பள்ளியில், 1880ம் ஆண்டு முதல், 1887 ம் ஆண்டு வரை மகாத்மா காந்தி
படித்தார். இதன் பின், 197ம் ஆண்டு இப்பள்ளி, மோகன் தாஸ் காந்தி
வித்யாலயா என மாற்றப்பட்டது.

இங்கு சேர்க்கையின் போது மாணவர்களுக்கு, ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மாணவியருக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. கடந்த, 2013 - 14ல்
இப்பள்ளியில் படித்த ஒரு மாணவர் கூட 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி
பெறவில்லை. இதையடுத்து இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும்
இட மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும், இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம்
மிக குறைவாகவே இருந்து வருகிறது. இதையடுத்து இப்பள்ளியில் படிக்கும்
மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றி விட்டு, காந்தி படித்த
பள்ளியை உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை கடந்த ஏப்., 29ம் தேதி துவங்கியது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer