கடந்த ஆண்டு இறுதியில், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் "துருவங்கள் பதினாறு". இந்த படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது 'நரகாசுரன்' என்ற தலைப்பில் புதிய படம் இயக்க உள்ளார் எனவும், இதில் அரவிந்த் சாமி தான் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் எனவும் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கதாநாயகியாக நடிகை ஸ்ரேயா ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் துருவங்கள் பதினாறு படத்தை போலவே க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment