தென்கொரியாவின் புதிய அதிபராக இரு தினங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்ட மூன் ஜே இன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுடனும் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
சமீப காலமாகத் தனது அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியிலும் விடாது செய்து வந்த வடகொரியா அதன் பிரதிபலனாக கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து விட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் போர்க் கப்பல்களும் கொரியக் கடற்பரப்பை முற்றுகையிட்டுள்ளன.
இந்நிலையில் தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களுக்குள் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அவசியம் ஏற்பட்டால் தக்க தருணத்தில் தான் வடகொரியாவுக்கு விஜயம் செய்து அதன் தலைவரை சந்திக்கவும் தயார் என்று தெரிவித்திருந்தார். அதோடு நின்று விடாது இவ்விவகாரம் தொடர்பில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் 40 நிமிடம் தொலைபேசியில் உரையாடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் வடகொரிய விவகாரத்தை அமைதி முறையில் அணுக முயற்சி செய்து வரும் மூன் ஜே இன் அதன் ஒரு கட்டமாக ஏற்கனவே ஜப்பானுடன் இருந்து வரும் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அந்நாட்டுப் பிரதமர் சின்ஷோ அபேயுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சீன, ஜப்பான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன்
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment