ஸ்மார்ட் போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஸ்மார்ட் போனில் முக்கிய பிரச்சனையே அது சீக்கிரம் சூடாகி விடுவது தான்.
அதை எளிதாக தடுக்க என்ன வழி?
4G மற்றும் 3G இணையம்
பொதுவாக ஸ்மார்ட் போன்களில் 4G மற்றும் 3G இணையம் அதிகளவில் உபயோப்படுத்தப்படுகிறது. பலர் இணைய Dataவை அணைத்து வைக்காமல் உள்ளதால் போன் சூடாகிறது.
உபயோகப்படுத்தாத சமயத்தில் இணையத்தை அணைத்து வைத்தால் போன் சூடாவது குறையும்.
ஆப்ஸ்
ஒரே நேரத்தில் அதிகளவு ஆப்ஸ்கள் செயல்ப்பாட்டிருந்தால் கூட போன் சீக்கிரம் சூடாகி விடும். தேவையில்லாததை ஸ்விச் ஆப் செய்து வைக்கலாம்.
ROM
செயல் மேம்படுத்துதல் (Processor Optimization) உங்கள் மொபைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்ய வேண்டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வேண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும்.
சார்ஜ் போடுவது
சார்ஜ் செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்ப்படுத்த கூடாது. அப்படி பயன்ப்படுத்தினால் போன் அதிக சூடாகும்.
பேட்டரி
பழைய பேட்டரியை பயன்படுத்துவது மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். தரமான பேட்டரி பயன்ப்படுத்த வேண்டும்.
Tuesday, May 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment