Tuesday, May 2, 2017

முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றம் இதோ!

முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

► முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

► முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

► முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.

► முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

► முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

► அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.

► முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.

► முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer