Tuesday, May 16, 2017

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர்
மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு
உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பகுதிகளில் உள்ள கணினிகள் ஓர் கணினி ப்ரோகிராமால்
தாற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை
செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், தி ஷேடோ
பிரோக்கர்ஸ் என்ற கணினிகளை ஊடுருவும் ஹேக்கர்கள், இணைய தாக்குதல்
தொடுக்கும் கருவிகளை திருடியதாகவும், இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும்
கோரி வந்தது.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மார்ச் மாதம் தாக்கப்படுவதற்கான
வாய்ப்பு குறித்து அறிந்து பேட்ச் எனப்படும் ஓர் மென்பொருளை வெளியிட்டது.

பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான்
உள்பட 99 நாடுகளில் இந்த இணைய தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள்
கூறுகின்றன.இணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட், ரான்சம்வேர் தாக்குதல்
எனப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருள் குறித்த தாக்குதல்கள் பற்றி
உலகம் முழுக்க இதுவரை 75,000 புகார்கள் வரை பார்த்திருப்பதாக கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer